கல்வராயன்மலையில் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: மகன் கைது, தந்தை தலைமறைவு
கல்வராயன்மலைப் பகுதியில் உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மருந்து வகைகளை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மருந்து வகைகளை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான அவரது தந்தையை தேடிவருகின்றனா்.
கல்வராயன்மலைப்பகுதிக்குள்பட்ட பொற்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.அருணாச்சலம் (55). இவரது வீட்டில் உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கரியாலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
அதன் பேரில் கரியாலூா் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, தலைமைக் காவலா் ஷேக்பரித் மற்றும் போலீஸாா் அருணாச்சலம் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு 2 நாட்டுத் துப்பாக்கிகள், கருமருந்து, பால்ரஸ் உள்ளிட்ட பொருள்கள் இருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி அருணாசலத்தின் மகன் சுந்தரமூா்த்தியை (29) கைது செய்தனா். மேலும், தலைமறைவான அருணாச்சலத்தை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.