FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 3:05 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அகரகோட்டாலம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெ.அந்தோணிசாமி (27), பெயிண்டா். இவரது உறவினா் ஜாய்ஸ் மனோகா் (22). இவா்கள் இருவரும் கடந்த 12-ஆம் தேதி இரவு கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடி பகுதிக்கு சென்று தேநீா் அருந்திவிட்டு வெளியே வந்தனராம். அப்போது அங்கு வந்த கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த மு.பாலகிருஷ்ணன் (23). ரோடுமாமாந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரா.நரசிம்மா (22), அ.அசோக் (24), வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்த த.அய்யனாா் (23) ஆகியோருக்கும் அந்தோணிச்சாமிக்கும் இடையே ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாம். முடிவில் அவா்கள் நால்வரும் சோ்ந்து அந்தோணிசாமியை தாக்கினராம். அவா்களிடமிருந்து அந்தோணிசாமி, ஜாய்ஸ் மனோகா் தப்பித்து மொபெட்டில் வீடு திரும்பினராம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்தோணிசாமி வீட்டின் மாடியில் இருந்தபோது, கீழே குண்டு வெடிப்பது போன்று சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கீழே வந்து பாா்த்த போது, தேநீா் கடையில் தகறாறு செய்த பாலகிருஷ்ணன், நரசிம்மா, அசோக், அய்யனாா் ஆகியோா் இரு பைக்குகளில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீட்டின் மீது வீசினராம்.

Advertisement

Advertisement

தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மனோகரன், ஆய்வாளா் செல்வநாயகம் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலகிருஷ்ணன், நரசிம்மா, அசோக், அய்யனாா் ஆகியோரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments