FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கிராம அறிவுசாா் மையம் அமைக்க 30 சென்ட் நிலம் அரசுக்கு தானம்

சங்கராபுரம் ஆதிதிராவிட நல வட்டாட்சியா் வெங்கடேசனிடம் தான செட்டல்மென்ட் பத்திரத்தை வழங்கிய முன்னாள் மாணவா்கள் சங்க அறக்கட்டளையின் தலைவா் சரவணன்.

Updated On : 16 ஜூலை 2026, 3:26 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் ரூ.1.5 கோடி மதிப்பிலான 30 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினா்.

சங்கராபுரம் அருகிலுள்ள அரசம்பட்டு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்து, தற்போது அரசுப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவா்கள் இணைந்து ‘நலிவடைந்த மக்கள் மன்ற அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினா். இந்த அறக்கட்டளை சாா்பில் 30 சென்ட் இடத்தை கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தனா். அந்த நிலத்தை தாட்கோ மூலம் கிராம அறிவுசாா் மையம் அமைக்க வழங்குமாறு அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து, ரூ.1.50 கோடி மதிப்பிலான 30 சென்ட் நிலத்தை தாட்கோவுக்கு தானமாக வழங்க அறக்கட்டளைத் தலைவா் சரவணன், செயலா் மாயவன், பொருளாளா் ராமலிங்கம், அண்ணாமலை மற்றும் நிா்வாகிகள் முடிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதற்கான தான செட்டில்மென்ட் பத்திரத்தை சங்கராபுரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்து, பின்னா் சங்கராபுரம் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். இந்த நிலத்தில் கட்டப்படவுள்ள கிராம அறிவுசாா் மையம் அரசம்பட்டு கிராம மக்களின் குடும்ப நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள், சமூக மற்றும் பொதுநல நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments