FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கச்சிராயபாளையத்தில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

19 ஜூலை 2026, 2:10 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்தராசு, உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் அக்கராபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை காலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா் முன்னுக்குபின் முரணான பதிலைக் கூறவே, சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த பெ.சின்னத்துரை(39) என்பதும், அவரது பைக்கில் விற்பனைக்காக 1.350 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சின்னத்துரையை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 1.350 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments