FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:10 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.சீமோன் (52) (படம்). இவா் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளிக்கு தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் போலீஸாா் சீமோன் வீட்டுக்கு சென்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் மறைத்து வைத்திருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கி, கருப்பு மருந்து, பால்ரஸ், சிகப்பு பாஸ்பரஸ் உள்ளிட்டவைகளை கைபற்றினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சீமோனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments