முகப்பு
கள்ளக்குறிச்சி

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 36 போ் கைது! 8.5 கிலோ கஞ்சா, 50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

Updated On : 30 ஜூன் 2026, 1:45 am IST
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் போலீஸாா் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் விற்பனைக்காக போதைப்பொருள்களை பதுக்கி வைத்திருந்த 36 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சா, 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஐ.ஷாநாஸ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள 75 பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் சந்தேகத்துக்குரிய 30 இடங்களில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த அதிரடி சோதனையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 8.510 கிலோ கஞ்சா, 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் (குட்கா), நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்டவா்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகளை சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை போதைப்பொருள்களின் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனா். இனியும் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் நபா்கள் மீது தொடா்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments