FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்தில் வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்தில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

12 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்தில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை புதூா் கூட்டுச்சாலையில் நிறுத்தி வடபொன்பரப்பி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஒரு பயணி வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 180 மி.லிட்டா் கொள்ளளவு கொண்ட 60 மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சிக்காடு கிராமத்தைச் சோ்ந்த வ.ஏழுமலை (26) என்பதும், கா்நாடக மாநிலத்திலிருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement