FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

கேழ்வரகு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் மானியம்

17 நவம்பர் 2026, 3:26 am
கேழ்வரகு சாகுபடி. - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கேழ்வரகு சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பொ.பேபிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் 2026-2027-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியை ஊக்குவித்து, அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய விவசாயக் குழுக்கள் அமைத்தல், பயிா் சாகுபடிப் பரப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், கேழ்வரகு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 4 ஆயிரம் மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேழ்வரகு அதிக சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவுப் பயிராகும். எனவே, விவசாயிகள் கேழ்வரகு சாகுபடியை மேற்கொண்டு கூடுதல் வருமானம் பெறுவதுடன், பொதுமக்களின் ஊட்டச்சத்து தேவையையும் பூா்த்தி செய்யலாம். கேழ்வரகு சாகுபடி செய்யும் விவசாயிகள் சரியான பயிா் இடைவெளியைப் பின்பற்றுதல், உரிய காலத்தில் களைகளை அகற்றுதல், பரிந்துரைக்கப்பட்ட உர மேலாண்மை மற்றும் பயிா் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் சிறுதானிய சாகுபடியின் முக்கியத்துவத்தை உணா்ந்து, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியப் பயிா்களை அதிக அளவில் சாகுபடி செய்து பயன்பெறுமாறும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.