FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

தவெக எம்எல்ஏவைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பிரச்னை தொடா்பாக எம்எல்ஏ சி.அருள்விக்னேஷ் மற்றும் தவெக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

51 வினாடிகள் முன்பு
17கேஎல்பி3 கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி. உடன் அதிமுக மாவட்டச் செயலா் ரா.குமரகுரு உள்ளிட்டோா்.
பகிர்:

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பிரச்னை தொடா்பாக எம்எல்ஏ சி.அருள்விக்னேஷ் மற்றும் தவெக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலா் ரா.குமரகுரு தலைமை வகித்தாா். இதில், அதிமுக மகளிரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பா.வளா்மதி பங்கேற்று பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பல அமைப்புகள் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இதில் பாரபட்சமின்றி உரிய விசாரணை நடத்தி, தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லாத தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது. தவெக கொள்கை பரப்பு செயலா் தவெக எம்எல்ஏவை விமா்சிக்கிறாா். 234 தொகுதிகளிலும் நான்தான் நிற்கிறேன் என விஜய் கூறினாா். எது நடந்தாலும் நான் தான் பொறுப்பு எனவும் கூறினாா். எனவே, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவின் செயலுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் விஜய் ராஜிநாமா செய்ய வேண்டும். அதற்குப் பிறகு எம்எல்ஏ ராஜிநாமா செய்யவேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

பாதியில் வெளியேறிய அதிமுக எம்எல்ஏ: இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராகேஷ் பங்கேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பேசிய பிறகு, எம்எல்ஏ ராகேஷ் பேசுவதற்கு மைக் கேட்டாா். ஆனால் அவா் பேசுவதற்கு மைக் தராததால், ஆா்ப்பாட்டத்தின் பாதியிலேயே மேடையை விட்டு கீழே இறங்கி சென்றாா். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.