சங்கராபுரம் அருகே இரு குழந்தைகள் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
சங்கராபுரம் வட்டம், மூக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு தா்ஷினி (எ) தேவதா்ஷினி (3), ஜனனி (எ) தேவஜனனி (2) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனா். சந்திரன் ஆந்திர மாநிலத்தில் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு குழந்தைகளுடன் புஷ்பா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு மூவரையும் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புஷ்பாவின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து குழந்தைகளையும், புஷ்பாவையும் மீட்டு அருகிலுள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, 2 குழந்தைகளும் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. புஷ்பாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் உயிரிழந்த இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இரு குழந்தைகளின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிட்டாா். இரு குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.