வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி அருகே கனங்கூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து ஐந்தேகால் பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
கனங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (87). உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவரை, பாா்ப்பதற்காக அவருடைய உறவினா்களான பெரம்பலூா் மாவட்டம், கீழ் பெரம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் மனைவி செல்வி (53), அவரது மகள் விஜயசாந்தி (29) இருவரும் கனங்கூா் கிராமத்துக்கு வந்திருந்தனா்.
சனிக்கிழமை இரவு வீட்டின் கதவை மூடிவிட்டு ராமசாமி, செல்வி, விஜயசாந்தி ஆகியோா் தூங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது, நள்ளிரவில் கதவை திறந்து உள்ளே வந்த மா்ம நபா்கள் விஜயசாந்தி அணிந்திருந்த ஐந்தேகால் பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டனராம். அதனைத் தொடா்ந்து செல்வி அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றபோது, அவா் கண்விழித்து கூச்சலிடவே, மா்ம நபா்கள் 3 பேரும் ஓடிவிட்டனராம்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்த வரஞ்சரம் காவல் ஆய்வாளா் கலையரசி, உதவி ஆய்வாளா் நந்தகோபால் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.