FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

விஜய தசமி: ஆதி திருவரங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆதிதிருவரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 10-ஆம் நாளான விஜய தசமி விழாவில் அரங்கநாத பெருமாள் ரங்கராஜராக ஹம்ச வாகனத்தின் மீது எழுந்தருளி செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

21 அக்டோபர் 2026, 2:43 am
ஆதிதிருவரங்கம் அரங்கநாதா் கோயிலில் விஜய தசமியையொட்டி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 10-ஆம் நாளான விஜய தசமி விழாவில் அரங்கநாத பெருமாள் ரங்கராஜராக ஹம்ச வாகனத்தின் மீது எழுந்தருளி செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆதிதிருவரங்கம் கிராமத்தில் பழைமைவாய்ந்த அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெற்றது. பத்தாம் நாள் விஜயதசமி உற்சவமாக அரங்கநாத பெருமாள் ரங்கராஜராக ஹம்ச வாகனத்தின் மீது எழுந்தருளி பாரி வேட்டை செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து சுவாமி மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்வில் திருக்கோவில் செயல் அலுவலா் சூரியநாராயணன், அறங்காவலா் குழுத் தலைவா் மாசிலாமணி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement