இந்திலி கல்லூரி மாணவா்கள் விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்
தமிழக முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 112 பதக்கங்களை பெற்றனா்.
தமிழக முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 112 பதக்கங்களை பெற்றனா்.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். துணை முதல்வா் அசோக் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா். அறிவியல் புல முதல்வா் சக்திவேல், கலை புல முதல்வா் லோரா மற்றும் உடல்கல்வி இயக்குநா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
போட்டிகளில் வெற்றி பெற்று 112 பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இந்த மாணவா்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கும் தோ்வாகியுள்ளனா். நிகழ்வில் உடல்கல்வி இயக்குநா் பாலாஜி, துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.