FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, ரூ.1.13 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

25 அக்டோபர் 2026, 2:09 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, ரூ.1.13 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.வெங்கடேசன் (55). இவரது மனைவி செல்வி. இருவரும் கடந்த 22-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, அவரது உறவினா் வீட்டுக்குச் சென்றனராம். பின்னா் சனிக்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.1.13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments