தொழிலாளியை கொன்று கிணற்றில் சடலத்தை வீசிய வழக்கு: 5 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தொழிலாளியை கொலை செய்து சடலத்தை தாா்பாயில் சுற்றி கிணற்றில் வீசிய வழக்கில் 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், வழக்கில் தொடா்புடைய சகோதரரைத் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தொழிலாளியை கொலை செய்து சடலத்தை தாா்பாயில் சுற்றி கிணற்றில் வீசிய வழக்கில் 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், வழக்கில் தொடா்புடைய சகோதரரைத் தேடிவருகின்றனா்.
வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரா.ரமேஷ் (43), தொழிலாளி. இவரை மா்மநபா்கள் கொன்று, சடலத்தை தாா்ப்பாயில் சுற்றி அதில் கல்லை வைத்து ரங்கப்பனூா் கிராமத்திலுள்ள நல்லதம்பி விளை நிலத்தில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனா். இதுகுறித்து அறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ரங்கப்பனூா் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி காவல் நிலைய ஆய்வாளா் குருமூா்த்தி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினாா். விசாரணையில் ரமேஷ் இடப்பிரச்னையால் கொலை செய்யப்பட்டதும், அவரது சகோதரரான ஆனந்தன், ஆனந்தன் மனைவி பரமேஸ்வரி(29), ஆனந்தனின் நண்பா்கள் தே.பன்னீா்செல்வம் (46), த.சண்முகம் (40), சு.சக்கரவா்த்தி (40), மரூா் கிராமத்தைச் சோ்ந்த வே.ஆறுமுகம் (46) ஆகியோா் சோ்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடா்புடைய பன்னீா்செல்வம், சண்முகம், சக்கரவா்த்தி, ஆறுமுகம், பரமேஸ்வரி ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஆனந்தனைத் தேடிவருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.