சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே டிப்பா் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி அருகே டிப்பா் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெ.வடிவேலு (52), தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு தியாகதுருகத்தில் வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம்.
பெரியமாம்பட்டு அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த டிப்பா் லாரி சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வடிவேலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிப்பா் லாரி ஓட்டுநா் க.சீனுவிடம் (31) விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாலை மறியல்: முன்னதாக விபத்து நடைபெற்ற பகுதியில் திரண்ட கிராம மக்கள், இந்த இடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்த்தை தடுக்க தடுப்புக்கட்டை அமைக்கவேண்டும் எனக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் தடுப்புக்கட்டை அமைப்பதாக கூறியதன் பேரில், சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனா். இதனால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.