முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மற்றும் தொழில் முனைவோா் கருத்தரங்கு ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மற்றும் தொழில் முனைவோா் கருத்தரங்கு ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் கோரி முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். பின்னா் அவற்றை, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியின் அடிப்படையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அறிவுறுத்தினாா். இதில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடமிருந்து 12 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தொடா்ந்து முன்னாள் படைவீரா் தொகுப்பு நிதியிலிருந்து வங்கிக் கடன் வட்டி மானியம் ஒரு பயனாளிக்கு ரூ.42,274-மும், 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.25 ஆயிரமும், முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து ஈமச்சடங்கு நிதியுதவியாக 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், ஒரு பயனாளிக்கு ரூ.6,600 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும் முன்னாள் படைவீரா் குடும்பத்தினருக்கு ஆட்சியா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து முன்னாள் படைவீரா்களுக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை, மாவட்ட தொழில் மையம், மீன்வளத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் மற்றும் வங்கிக் கடனுதவிகள் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் தொழில் முனைவோா் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் ஹ.ஆயிஷாபேகம் மற்றும் முன்னாள் படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.