வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தோ்வு முறைப்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இப் பணியிடம் வெளிநிரவல் அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட தோ்வுக் குழு வாயிலாக நோ்காணல் நடத்தப்பட்டு தகுதியானவா் தோ்வு செய்யப்படுவா். இப்பணிக்கான ஊதியத்தை வெளிநிரவல் நிறுவனமே வழங்கும்.
விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ செயலா்- பொருளாளா், கள்ளக்குறிச்சி மாவட்ட முகமை, கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் - 606 213 என்ற முகவரிக்கு வரும் அக்.5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.