FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நிலுவைத் தொகை கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

கரும்புக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

கரும்புக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லிங்கா ரெட்டிப்பாளையத்தில் அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 18 ஆயிரம் விவசாயிகள், 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டு, அறவை பருவத்தையொட்டி புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் டிராக்டர் மூலம் கரும்புகள் அனுப்பி வருகின்றனர்.

நடப்பாண்டிற்கு 1 லட்சம் டன் கரும்பு வெட்டி அனுப்பப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள் ஆகியும் கூட்டுறவு சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்குரிய ரூ.7 கோடி வழங்கப்படவில்லை. 

Advertisement

Advertisement

மேலும் கடந்தாண்டு வெட்டி அனுப்பிய கரும்பிற்கு நிலுவைத் தொகை ரூ.11 கோடி மற்றும் வங்கிக் கடன் என மொத்தம் ரூ.19 கோடி விவசாயிகளுக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கரும்பு விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

அதன்படி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கரும்புடன் சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தனர்.

அவர்களை சிறிது தூரத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments