FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மக்கள் மனங்களில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை அகற்ற முடியாது: மாநில காங். தலைவர் நமச்சிவாயம் பேச்சு

மக்கள் மனங்களில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை அகற்ற முடியாது என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

மக்கள் மனங்களில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை அகற்ற முடியாது என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் தபால் தலைகளை மத்திய அரசு நிறுத்தியதைக் கண்டித்து, புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் தலைமை தபால்நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் க.லட்சுமி நாராயணன், இ.வல்சராஜ், வட்டாரக் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

 ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது: மத்திய பா.ஜ.க. அரசு  காங்கிரஸ் தலைவர்களின் தபால் தலைகளை தடை செய்துள்ளது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

 நாட்டு மக்களுக்காக உழைத்த காங்கிரஸ் தலைவர்களின் தபால் தலைகளை நீக்கி மக்களின் மனதில் இருந்து அவர்களை எடுத்து விடலாம் என்ற மோடியின் எண்ணம் நிச்சயம் பலிக்காது. காங்கிரஸில் உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

 மத்திய அரசு தனது தவறை  திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் போராடத் தயாராக உள்ளோம். எனவே, நிறுத்திய தபால் தலைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்றார் நமச்சிவாயம்.

 துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், கே.விநாயகமூர்த்தி, பிகே.தேவதாஸ், வி.பாலாஜி,  நீல கங்காதரன், பொதுச் செயலாளர்கள் டி.ஜெயமூர்த்தி, ஏ.கே.டி.ஆறுமுகம், ஏ.ஏழுமலை, எம்.சுவாமிநாதன், கே.ஏகாம்பரம், சங்கர், எஸ்.தனுசு, ஏவி.வீரராகவன், வி.கண்ணபிரான், ஏ.ஜான்குமார், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments