FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

புதுவையில் ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்குவோர் நலச் சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் வினோபா நகர் சமுதாய நலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

புதுவையில் ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்குவோர் நலச் சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் வினோபா நகர் சமுதாய நலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில சிறப்புத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் கொடியேற்றி வைத்தார். சுமை தூக்குவோர் சங்க மாநிலச் செயலர் தயாளன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைவர் நாரா கலைநாதன் தொடக்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலர் வி.எஸ்.அபிஷேகம், துணைப் பொதுச் செயலர் தினேஷ்பொன்னையா, மாநிலச் செயலர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி செயலர் பி.முருகன், நளவேந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

சுமைதூக்கும் தொழிலாளர் பிரச்னையில் காவல் துறையினரின் தலையீடு உள்ளதால், தொழிலாளர், உரிமையாளர் இடையே பாதிப்பு ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைப் போக்க சுமைதூக்கும் தொழிலாளர், வர்த்தகர்கள், காவல் துறையினரைக் கொண்டு முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட தொழிலாளர் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். கடை மற்றும் நிறுவனங்களில் உரிமையாளர்களால் பணியமர்த்தப்பட்டுள்ள சுமை தூக்கும் தொழிலாளர் பட்டியலை பதிவு செய்து வெளியிட வேண்டும் என்றும் கூட்டத்தின் மூலம் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments