FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காரைக்காலில் 2-ஆவது நாளாக நகை வியாபாரிகள் கடையடைப்பு

மத்திய அரசின் ஒரு சதவீத கலால் வரியை எதிர்த்து, 3 நாள் போராட்டத்தையொட்டி காரைக்காலில்  நகை வியாபாரிகள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடைகளை அடைத்தனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மத்திய அரசின் ஒரு சதவீத கலால் வரியை எதிர்த்து, 3 நாள் போராட்டத்தையொட்டி காரைக்காலில்  நகை வியாபாரிகள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடைகளை அடைத்தனர்.

காரைக்கால் நகரப் பகுதியில் நகை வியாபாரம், நகை செய்வோர் என 85 நகை வியாபாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடப்பு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில், தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர், நகை தொழிற்கூடங்கள் நடத்துவோர் உள்ளிட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த கலால் வரி மூலம் ஒரு சவரன் ரூ. 400 கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டிவரும். இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாகும். மேலும் வரி செலுத்துவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் கூடுதல் பேப்பர்ஸ் கொடுக்க வேண்டியுள்ளது. இது வியாபாரிகளுக்கு பாதிப்பை தரும். நகை வாங்குவோரின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உருவாகிவிடும்.

ஏற்கெனவே ரூ. 2 லட்சத்துக்கு மிகுதியான பணப் பரிவர்த்தனை செய்தால், பான் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், நகை வியாபாரம் பாதிக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில், காரைக்கால் போன்ற பின்தங்கியப் பகுதிகளில் இந்தத் தொழில்  நலிந்து போக வாய்ப்பிருக்கிறது என காரைக்கால் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. காரைக்காலில் உள்ள பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, திருநள்ளாறு வீதியில் உள்ள நகைக் கடைகள் கடை அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments