சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரி மனையியல் துறை, எக்கோ கிளப் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரி மனையியல் துறை, எக்கோ கிளப் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குப்பைகளை நிர்வாகம் செய்வது எப்படி என்ற தலைப்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் கலையரசன், சுற்றுச்சூழல் சேவையாளர் கேசி.ராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
Advertisement
Advertisement
குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து அவற்றை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என விளக்கம் அளித்தனர்.
கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை வகித்தார். மனையியல் துறைத் தலைவர் ஜோஸ்பின் நிர்மலா ராணி முன்னிலை வகித்தார். எக்கோ கிளப் நிர்வாகிகள் மல்லிகேஸ்வரி, ரஜினி ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.