கருணாநிதிக்கு தமிழ்ச் சங்கம் அஞ்சலி
புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருணாநிதி மறைவையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் அவருக்கு பொதுநல அமைப்புகள், பொதுமக்கள், திமுக கட்சியினர் விளம்பரத் தட்டிகள், பேனர்கள் ஆங்காங்கே வைத்திருந்தனர். முக்கிய சாலைகளில் கருணாநிதியின் உருவத்துடன் கூடிய பேனர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு, புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் வி.முத்து தலைமையில் செயலர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சீனு. மோகன்தாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.