வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
புதுவை மாநிலம், வில்லியனூரில் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை மாநிலம், வில்லியனூரில் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர் கோட்டமேடு பகுதியில் வசித்து வந்தவர் கனகராஜ். இவரது மகள் பூரணி (25). கராத்தே மாஸ்டரான இவர், தந்தை இறந்துவிட்டதால், தாயுடன் வசித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை பூரணி வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதால், வாகனத்தை தள்ளிக்கொண்டு பஞ்சர் ஒட்ட சென்றார். இதனை அறியாத பூரணியின் தாயார் மகள் வீட்டிற்குள் இருப்பதாக எண்ணி வீட்டை பூட்டாமல் வெளியில் சென்று விட்டார்.
பூரணி பஞ்சர் ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது, வீட்டினுள் அலமாரியில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், இருபத்தி மூன்றாயிரம் ரொக்கம் ஆகியவை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.