புதுச்சேரியில் ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நாள்
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் 146-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் 146-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அரவிந்தர் கடந்த 15.1872-ல் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தார். ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, கடந்த 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்து ஆசிரமத்தை நிறுவினார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஆசிரமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அரவிந்தரின் பிறந்த நாள் விழா, ஆசிரமத்தில் ஆண்டுதோறும் ஆக.15-ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, ஆசிரமத்தில் புதன்கிழமை (ஆக.15) அரவிந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அரவிந்தரின் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். அரவிந்தர் ஆசிரமத்தில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டனர்.
அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய அறைகள், பொருள்கள் பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இதனை தரிசித்தனர்.
அரவிந்தர் பிறந்த நாளையெட்டி "ஆரோவில்' சர்வதேச மையத்தில் உள்ள மாத்திரி மந்திர் முன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து "போன் பயர்' எனப்படும் தீபோற்சவ தியானத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.