FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் விரைவில் நியமனம்

புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அக்கட்சியின் புதுவை பிரதேசத் தலைவரும்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அக்கட்சியின் புதுவை பிரதேசத் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுவை முன்னாள் முதல்வர் வெங்கட சுப்பையாவின் பிறந்த நாள் விழா புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  
இந்த நிகழ்ச்சிக்கு பிரதேச காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை வகித்து வெங்கடசுப்பையா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி,  முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன்,  காங்கிரஸ் துணைத் தலைவர்கள் தேவதாஸ்,  நீலகங்காதரன்,  மகளிர் அணி தலைவி பிரேமலதா,  இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுவை மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக, பெரிய சவாலான பணியான மக்களவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலை எதிர்கொண்டு பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறிய பிரதமர் மோடியிடம் இருந்து 3 மாநில பாஜக ஆட்சியை ராகுல் பறித்துள்ளார்.  
இதே நிலை வரும் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட காங்கிரஸார் தீவிரமாக பணியாற்ற வேண்டும். 
மோடி ஆட்சியின் அவல நிலை,  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.  மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைக்கும் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும். கட்சித் தலைமை பணிகளை வழங்கி குறித்த காலத்துக்குள் முடிக்க காலக்கெடுவையும் நிர்ணயம் செய்துள்ளது.
விரைவில் அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் வருகிற 23-ஆம் தேதி வந்து,  பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.  அதற்குள் 2, 3 தொகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றார் நமச்சிவாயம். 
அரசு சார்பில் மரியாதை: முன்னதாக, அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடசுப்பா ரெட்டி சிலைக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம்,  வெங்கடசுப்பா ரெட்டியின் மகனும், பேரவைத் தலைவருமான வெ.வைத்திலிங்கம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments