தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மச் சாவு
புதுச்சேரி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை திலாசுப்பேட்டை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி வசந்தா (34). தனியார் நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அய்யனார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில், வசந்தா குழந்தைகளுடன் தனது தாய் பவுனு (70) வீட்டில் வசித்து வந்தார்.
திங்கள்கிழமை வசந்தா பணிக்கு செல்ல முயன்ற போது, வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதித்த சிறிது நேரத்தில் வசந்தா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வசந்தா ஏன் இறந்தார் என்பதற்கான காரணம் தெரியாததால்
இதுகுறித்து தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் வசந்தாவின் தாய் பவுனு புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். வசந்தா இறந்ததற்கான சரியான காரணம் தெரியாததால், அவரது சில உடலுறுப்புகள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உடலுறுப்பு சோதனை முடிவுகள் வந்த பிறகே வசந்தா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.