FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் விநியோகம்

புதுச்சேரியில் மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம் சார்பில் 17 பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

புதுச்சேரியில் மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம் சார்பில் 17 பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
புதுவை மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம், பொருளாதார நிலையில் பின்தங்கிய மகளிர் மேம்பாட்டுக்காகவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அனைத்து மகளிரும் பயன்பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு பயனுள்ள தொழில் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
இதன் அடிப்படையில் இந்தக் கழகத்தின் மூலம் 17 மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, அதற்கான உரிமங்களை சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து,  புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம்,  மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments