FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லாட்டரி விற்ற இருவர் கைது

புதுச்சேரியில் அனுமதியின்றி லாட்டரி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

புதுச்சேரியில் அனுமதியின்றி லாட்டரி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவை முத்தியால்பேட்டை சாலைத் தெரு காட்டாமணிகுப்பம் அருகே உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் காட்டாமணிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோ (45),  ஆறுமுகம் (44) என்பதும், தடை செய்யப்பட்ட கேரள மாநிலத்தின் 3 எண் கொண்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. 
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ. 5,700 ரொக்கம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments