புதுச்சேரியில் அனைத்து மின் கட்டண வசூல் மையங்களும் இன்று முதல் இயங்கும்
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக, புதுச்சேரியில் அனைத்து மின் கட்டண வசூல் மையங்களும் வியாழக்கிழமை (ஏப்.23) இயங்கும் என்று மின் துறை தெரிவித்தது.
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக, புதுச்சேரியில் அனைத்து மின் கட்டண வசூல் மையங்களும் வியாழக்கிழமை (ஏப்.23) இயங்கும் என்று மின் துறை தெரிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக, மின் துறையின் அனைத்து மின் கட்டண வசூல் மையங்களும் வியாழக்கிழமை (ஏப்.23) முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கும்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் தங்களது மாதாந்திர மின் கட்டணத்தை பிம், பேடிஎம், கூகுள் பே, போன் பே, அமேஸான் பே, மொபிக்விக் ஆகிய செல்லிடப்பேசி செயலிகள் மூலமும், ட்ற்ற்ல்://ல்ங்க்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகவும் செலுத்தலாம்.
ஊரடங்கின் காரணமாக மீட்டா் கணக்கீடு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணத் தொகையை கடந்த 3 மாதங்களின் சராசரி கணக்கீட்டின்படி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை இணையதளம், மின் கட்டண வசூல் மையங்களில் அறியலாம்.
பொதுமக்கள் இணையதளம் மூலம் மின் கட்டணத்தை செலுத்துவதை முதல் வாய்ப்பாக தோ்வு செய்ய வேண்டும். இணையதள வசதி இல்லாதவா்கள் மட்டும் மின் கட்டண வசூல் மையங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.