முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ரௌடி; பிடித்துக் கொடுத்த மக்கள்

புதுச்சேரியில் குடிபோதையில் கார் ஓட்டி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரெளவுடியான

Updated On : 14 மே 2022, 1:06 pm IST
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் கார் ஓட்டி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரெளவுடியான போதை ஆசாமியின் காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதுடன், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற நண்டு ஆறுமுகம். பிரபல ரெளவுடியான இவர் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் புதுச்சேரி மெரினா கடற்கரைக்கு  சென்றுள்ளார். குடும்பத்தினர் மட்டும் கடற்கரைக்கு சென்றனர். ஆனால் ஆறுமுகம் காரிலேயே அமர்ந்து மது குடித்துள்ளார்.  பின்னர் ஆறுமுகம் நிதானம் இழந்து குடும்பத்தாருடன் வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.

கடற்கரையில் இருந்து  ரயில்வே நிலையம் எதிரே வரும்பொழுது போதையில் ஆறுமுகம் தாறுமாறாக கார் ஓட்டியதில் சாலையில் நின்றுகொண்டிருந்த மற்றும் எதிரே வந்த  இருசக்கர வாகனம் என 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது தாறுமாறாக மோதி விபத்தை ஏற்படுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். ஆனால் இதை காதில் வாங்காமால் ஆறுமுகம் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

Advertisement

இதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டும், போதையில் ஆறுமுகம்  நிதானம் இல்லாமல் இருந்ததால், மேலும் எதிரே வந்த மூன்று கார்களையும் இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார். அவரை விரட்டிக்கொண்டு பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர், அப்போது  பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது கார் பஞ்சர் ஆகவே அவரை மடக்கிப் பிடித்து பொதுமக்கள்  காரை அடித்து நொறுக்கியதுடன், அவருக்கு தர்மஅடி கொடுத்து அருகில் உள்ள ஒதியன் சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆறுமுகம் மோதிய விபத்து காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் குடிபோதையில் கார் ஓட்டி வந்த ஆறுமுகம் என்கிற நண்டு ஆறுமுகம் மீது மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காவல்நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் முக்கிய 10 ரெளவுடிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலும் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.