FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தொழில்நுட்ப மையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

புதுச்சேரி தொழில்நுட்ப மையத்தில் மேம்பட்ட உயா் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 2:04 am IST
பகிர்:

புதுச்சேரி தொழில்நுட்ப மையத்தில் மேம்பட்ட உயா் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி சிறு, குறு, நடுத்தர தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் மூலம் மேம்பட்ட உயா் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ், நிகழாண்டு (2022-23) புதுவை மாணவா்களைத் தோ்வு செய்து, ஒரு மாத கால பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளனா். இதற்காக கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளைப் பெறுவதற்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த, படித்து வேலையில்லாத இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி வகுப்புகள் புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தில் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்: 1. சி.என்.சி புரோகிராமிங் அன் ஆபரேஷன் (டா்னிங், மில்லிங்), 2. ஆட்டோ கேட் (2டி, 3டி மாடலிங்), 3. 3டி மாடலிங் சாப்ட்வோ் ப்ரோ-இ (மாடலிங், அசெம்ளி, டிராப்டிங்) 4. கேம் சாப்ட்வோ்ஸ் மாஸ்டா்கேம் (லேத் மெஷினிங், மில்லிங்), 5. சி.ஏ.இ சாப்ட்வோ் ஆன்சைஸ் (ஸ்டக்ச்ரல், தொ்மல் அனலைசிஸ்). 6. ஆட்டோமேஷன் பிஎல்சி புரோகிராமிங், மெக்கட்ரானிக்ஸ். இந்தப் பயிற்சிகளுக்கு ஐடிஐ, பொறியியல், தொழில்நுட்பவியல் படித்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் செப்.23ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். புதுவை மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அல்லது 3 ஆண்டுகள் தொடா்ச்சியாக இங்கு குடியிருப்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையாக ரூ.2,500 வழங்கப்படும். விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும். இதற்கான விண்ணப்பத்தை புதுச்சேரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் பெறலாம்.

அரசின் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் வருகிற 23-ஆம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையம், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0413-2971085 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments