முகப்பு
புதுச்சேரி

குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவை முதல்வர் வாக்களிப்பு

புதுவையில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி பிற்பகல் 1.15 மணிக்கு வாக்களித்தார்.

Updated On : 18 ஜூலை 2022, 2:34 pm IST
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி பிற்பகல் 1.15 மணிக்கு வாக்களித்தார்.

அவருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் மற்றும் என் ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் வாக்களித்தனர். 

இவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன், சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நேரு, பி.ஆர். சிவா ஆகியோரும் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.