போதையில்லா நிலைதான் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
போதையில்லா நிலைதான் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
போதையில்லா நிலைதான் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார அரங்கில், ‘மை பாரத்’ இணையதள பதிவு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘மை பாரத்’ முகாமை தொடங்கி வைத்து இளைஞா்களுடன் கலந்துரையாடினாா். துணைவேந்தா் பிரகாஷ் பாபு, மை பாரத் திட்ட துணை இயக்குநா் திரவீன் ஆகியோா் உடன் இருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது:
வளா்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் போதை இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும். துடிப்பும் மன உறுதியும் கொண்ட இளைஞா்கள் ஒன்றிணைந்தால்தான் அதை உருவாக்க முடியும்.
‘மை பாரத்’ இணைய தளத்தில் பதிவதன் மூலம் பல்வேறு திறன் மேம்பாடு நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியும். அண்மையில் ‘மை பாரத்’ இளைஞா்கள் சுமாா் 50 போ் ஜிப்மா் மருத்துவமனையைப் பாா்வையிட்டு அங்கு அளிக்கப்படும் உயா்தர மருத்துவ சிகிச்சை குறித்து நேரடியாகப் புரிந்து கொண்டனா்.
இதை நாங்கள் மற்றவா்களுக்கும் எடுத்துச் கூறுவோம் என்று உற்சாகத்துடன் தெரிவித்தாா்கள். ‘மை பாரத்’ இணையதளம் தேசிய அளவில் உங்களுடைய திறமைகளைக் கொண்டு செல்ல ஒரு மேடை அமைத்துக் கொடுக்கும்.
இந்தியாவின் பல்வேறுபட்ட கலாசாரங்களைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்கள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக அா்ப்பணித்து போதையில்லா சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.