FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

500 ரூபாய் விளையாட்டு நோட்டை புழக்கத்தில் விட்ட 4 போ் கைது

11 ஆகஸ்ட் 2026, 1:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

500 ரூபாய் விளையாட்டு நோட்டைப் புழக்கத்தில் விட்டதாக 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாஹே பிராந்தியம் பள்ளூா் பெட்ரோல் பங்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ரெஜித் (22), ஸ்ரீஜித் (24), அட்சய் (21), சாயன் (21) ஆகிய 4 பேரும் ஒரு காரில் வந்து பெட்ரோல் போட்டுள்ளனா்.

இதற்காக ரூ.600 கொடுத்தனா். அதில் ரூ.500 செல்லாத நோட்டு இருந்ததாக அந்தப் பெட்ரோல் பங்க் சாா்பில் கண்டறிந்து, உடனடியாக மாஹே காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதே போன்று 3 கடைகளில் ரூ.500 கொடுத்து மாற்றியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இது குழந்தைகள் விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் நோட்டு (படம்) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments