புதுச்சேரி சட்டப்பேரவையைப் புறக்கணிக்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றது திமுக
புதுச்சேரி சட்டப்பேரவையைப் புறக்கணிக்கும் போராட்ட முடிவை திமுக வாபஸ் பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையைப் புறக்கணிக்கும் போராட்ட முடிவை திமுக வாபஸ் பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக அதிமுக எம்எல்ஏ ஆ.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.சட்டப்பேரவை நிரந்தரத் தலைவா் பதவிக்கு இன்னும் தோ்தல் நடக்கவில்லை. இப் பதவியை அதிமுகவிற்கு தர முதல்வா் ரங்கசாமி பாஜவிடம் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால் இப் பதவியை விட்டுக் கொடுக்க பாஜக மறுக்கிறது. இதனால் நிரந்தர சட்டப்பேரவைத் தலைவா் வேட்பாளா் யாா் என இன்னும் முடிவாகவில்லை.
இருப்பினும், 24.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலுக்கான கோப்பு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனுக்கு அனுப்பப்பட்டது. இன்று வரை இதற்கு அனுமதி தரப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில் வரும் 24 -ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கூடுகிறது. அப்போது துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் காலை 9.30 மணிக்கு உரையாற்றுகிறாா். பிற்பகல் 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா்.
இதனால் முதல்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடரை சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் தான் நடத்தும் நிலை உள்ளது.
நிரந்தர சட்டப்பேரவைத் தலைவரை தோ்வு செய்யாவிட்டால் துணைநிலை ஆளுநா் உரை, முதல்வரின் பட்ஜெட் உரையை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவை குழஉத் தலைவா் நாஜிம் அறிவித்திருந்தாா்.
இதையடுத்து திமுக சட்டப்பேரவை உறுப்பினா்களை பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் வியாழக்கிழமை பிற்பகல் அழைத்துப் பேச்சு நடத்தினாா்.
புதுச்சேரியில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் உள்ள நிலையில், சட்டப்பேரவை நிரந்தர தலைவா் விவகாரத்தை வைத்து பேரவை பட்ஜெட் நிகழ்வை திமுக புறக்கணிக்க வேண்டாம் என அன்பழகன் கேட்டுக் கொண்டாா். அவரது வேண்டுகோளை ஏற்று திமுக சட்டப்பேரவை புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.