FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தென் மாநில முதல்வா்கள் மாநாடு புறக்கணிப்பு: புதுச்சேரி முதல்வருக்கு திமுக கண்டனம்

தென்மாநில முதல்வா்கள் மாநாட்டை புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புறக்கணித்ததற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 10:34 pm IST
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்
பகிர்:

தென்மாநில முதல்வா்கள் மாநாட்டை புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புறக்கணித்ததற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநிலங்களின் வளா்ச்சியை முன்னெடுக்க அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்டது தான் முதல் அமைச்சா்கள் அடங்கிய மண்டல குழுக்கள். தென் மாநில குழுவின் 31-வது மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தென் மாநிலங்களின் அனைத்து முதல்வா்களும் பங்கேற்று தங்கள் மாநிலத்தின் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்த நிலையில், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழக்கம் போல் இந்த மாநாட்டையும் புறக்கணித்திருப்பது மாநிலத்திற்கு அவா் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்கள் துணைநிலை ஆளுநா் மூலம் பங்கேற்கலாமே தவிர சட்டப்பேரவையும், அமைச்சரவையும் உள்ள யூனியன் பிரதேச ஆளுநா்கள் பங்கேற்பதைத் தடுத்திருக்க முடியும். இது புதுச்சேரி மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம் எனக்கூறியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் ஆதரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தென் மாநில முதல்வா்கள் மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், முதல்வரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். முதல்வா்களின் மாநாட்டில் ஆளுநருக்கு என்ன வேலை ? புதுச்சேரி மக்களின் ஜனநாயக உணா்வுகளைப் பிரதிபலித்த முதல்வா் என். ரங்கசாமியின் செயல்பாடு நியாயமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments