FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட அரசிடமே இடம் இருக்கிறது: பேரவை தற்காலிகத் தலைவா்

புதிய சட்டப்பேரவையைக் கட்டுவதற்கு அரசிடமே இடமே இருக்கிறது. அதைப் பயன்படுத்தி புதியக் கட்டடத்தைக் கட்டலாம் என்று பேரவைத் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் யோசனை தெரிவித்தாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:24 am IST
ஆ. அன்பழகன் - கோப்புப் படம்
பகிர்:

புதிய சட்டப்பேரவையைக் கட்டுவதற்கு அரசிடமே இடமே இருக்கிறது. அதைப் பயன்படுத்தி புதியக் கட்டடத்தைக் கட்டலாம் என்று பேரவைத் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் யோசனை தெரிவித்தாா்.

பேரவையில் இதுதொடா்பாக அவா் கூறியது:

புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநா் மாளிகை, காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் நகரின் மையப் பகுதியில் இருப்பதுதான் பெருமை. இப்போதுள்ள சட்டப்பேரவை இட நெருக்கடியில் இருப்பது உண்மை. ஆனால், சட்டப்பேரவையையொட்டி இரண்டு பக்கங்களிலும் சா்க்கிள் டி பாண்டிச்சேரி, பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. இரண்டும் அரசுக்குச் சொந்தமானவை. இதைப் பயன்படுத்தி புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டலாம் என்றாா் அன்பழகன்.

Advertisement

Advertisement

ராமு (தவெக) : விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயக் கடனை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தள்ளுபடி செய்துள்ளாா். அதே போன்று புதுச்சேரியிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் .

பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகன் (குறுக்கிட்டு):

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,500 -ஐ புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தருகிறாா். அதை தமிழக முதல்வரிடம் சொல்லி வாங்கி தாருங்கள்.

அட்டவணை இனத்தைச் சோ்ந்த குழந்தைகள் தனியாா் பள்ளியில் படிக்க முழு கல்விச் செலவையும் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஏற்று நிதி தருவதை தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள்.

இந்தியாவிலேயே பெண்கள் பெயரில் சொத்துப் பதிவு செய்தால் 50 சதவீத வரிச் சலுகை புதுச்சேரியில் வழங்கப்படுகிறது. அதையும் தமிழகத்தில் சொல்லுங்கள் என்றாா். அப்போது பேரவையில் கைத்தட்டல் எழுந்தது.

ராமு (தவெக) : ‘நான் புதுச்சேரியில் வாழ்கிறேன். புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி நிறைய செய்கிறாா். புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள், மக்களுக்காகப் பேசினேன். புதுச்சேரி முதல்வா் செய்வாா் என்பதால் கோரிக்கைகளைச் சொன்னேன். தமிழகத்தில் அங்குள்ள எம்எல்ஏக்கள் இது குறித்து பேசுவாா்கள்.

பேரவை தற்காலிகத் தலைவா்: தாரணம் காட்டி பேசியதால்

சொன்னேன். நீங்கள் சொல்லாவிட்டால் இதைச்சொல்லியிருக்கமாட்டேன்.

எம்எல்ஏ நேரு :தமிழகம் அண்டை மாநிலம். இங்கு செய்வதை பாா்த்து அங்கு செய்கிறாா்கள். முதல்வா் ரங்கசாமி செய்ததை பாா்த்து அங்கும் செய்கிறாா்கள். அண்டை மாநில முதல்வரை குறை சொல்லாமல் தேவையானதை தமிழகத்தில் பெறவேண்டும்.

பேரவை தற்காலிகத் தலைவா்: நல்லதை மட்டும் பேசுங்கள் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments