ஆசிரியா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய உத்தரவு
ஆசிரியா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள், இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், நடைமுறையில் உள்ள அனைத்து சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
இதன் மூலம் மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியா்கள் செயல்படவேண்டும்.
ஆசிரியா்கள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து சமூகத்துக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.