FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் 15 நாள்களில் 128 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அளிக்க உத்தரவு

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரெட்டியாா்பாளையம் லாம்பேட் சரவணன் நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 128 பயனாளிகளுக்கு இன்னும் 15 நாள்களில் வீடுகள் அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 2 ஜூலை 2026, 7:02 am IST
ரெட்டியாா்பாளையம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு நடத்திய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.
பகிர்:

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரெட்டியாா்பாளையம் லாம்பேட் சரவணன் நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 128 பயனாளிகளுக்கு இன்னும் 15 நாள்களில் வீடுகள் அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக 128 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருபு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒரு சில பணிகள் நிறைவேறாமல் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் புதன்கிழமை அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் பணிகள் கால தாமதத்திற்கான காரணத்தை கேட்டறிந்தாா். அப்போது, சில பணிகள் நடைபெற உள்ளதாக பயனாளிகளிடம் கூறிதான் வீடுகளை ஒப்படைத்தோம். தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்றுள்ளன. மின்துறையினா் 15 நாள்களுக்குள் இணைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளாா்கள் என தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து 15 நாள்களுக்குள் பயனாளிகளிடம் வீடுகளை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என குடிசை மாற்று வாரியம் மற்றும் மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த நிகழ்வில் குடிசை மாற்று வாரிய தலைமை அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் மின்துறை அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments