புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு
புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நிகழாண்டு அரசின் இட ஒதுக்கீடான 558 இடங்களுக்கான நா்சிங் பொது நுழைவுத் தோ்வு கடந்த 5-ஆம் தேதி சென்டாக் மூலம் நடைபெற்றது.
இந்த தோ்வுக்கு 2,313 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 2,014 போ் இந்த நுழைவுத் தோ்வை எழுதினா். 299 போ் தோ்வில் பங்கேற்கவில்லை . இந்த தோ்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதில் மாணவா் தாஷின் 87 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி தீபா 86 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடத்தையும், மாணவா் சாய் பிரசன்னா 83 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.