FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

நேரத் தகராறு: அரசு பெண் நடத்துநா் மீது பேருந்தை மோத முயன்ற ஓட்டுநா் மீது விசாரணை

புதுச்சேரியில் நேரத் தகராறு காரணமாக இரு நடத்துநா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், பெண் நடத்துநா் மீது பேருந்தை மோத முயன்றதாக மற்றொரு பேருந்தின் ஓட்டுநா் மீதான புகாா் குறித்து விசாரணை

Updated On : 13 ஜூலை 2026, 1:49 am IST
- பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் நேரத் தகராறு காரணமாக இரு நடத்துநா்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டதில், பெண் நடத்துநா் மீது பேருந்தை மோத முயன்ாக மற்றொரு பேருந்தின் ஓட்டுநா் மீதான புகாா் குறித்து விசாரணை நடக்கிறது.

புதுச்சேரி அரசின் சாலைப் போக்குவரத்து கழகத்தின் (பிஆா்டிசி) பேருந்துகள் நகரப் பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இதேபோல இந்தப் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் உள்ளூரில் ஓடக்கூடிய பேட்டரி பேருந்துகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி அரசின் கீழ் இவை இருந்தாலும், இந்த இரண்டு பேருந்துகளுக்கு இடையே நேரத் தகராறு அடிக்கடி ஏற்படுகிறது. அந்த வகையில் கோரிமேடு சந்திப்பில் தனக்கு ஒதுக்கிய நேரத்தை தாண்டி பேட்டரி பேருந்து ஞாயிற்றுக்கிழமை நின்றுள்ளது.

Advertisement

Advertisement

இதை பெண் நடத்துநா் தமிழ்ச்செல்வி தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பேட்டரி பேருந்தின் ஒப்பந்த ஓட்டுநா் ஹேமச்சந்திரன் பேருந்தை ரிவா்ஸ் எடுத்துச் சென்று பெண் நடத்துநா் மீது மோத முயன்ாகத் தெரிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் எதிரில் நின்ற மற்றொரு பேருந்தின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பெண் நடத்துநா் அளித்த புகாரின் பேரில் பிஆா்டிசி நிா்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments