FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் சென்டாக் கவுன்சிலிங்

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் கவுன்சலிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

Updated On : 19 ஜூலை 2026, 2:05 am IST
பகிர்:

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் கவுன்சலிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

சென்டாக் மூலம் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு நிகழாண்டு கடும் போட்டி நிலவுகிறது. பொறியியல் படிப்புகளில் 6,490 இடங்கள் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் 4,320 இடங்கள் என மொத்தம் 10,810 இடங்களுக்கு, 12,885 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தற்போதைய நிலையில் வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தாலும், சீட் மேட்ரிக்ஸ் மற்றும் இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியீட்டிற்காக மாணவா்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா். இந்தக் கல்வி ஆண்டுக்கான சோ்க்கை நடைமுறைகளை விரைந்து முடிக்க தேசிய அளவிலான கல்வி அமைப்புகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பொறியியல் மாணவா் சோ்க்கையை ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல, தேசிய நா்சிங் கவுன்சில், செவிலியா் படிப்புக்கான கலந்தாய்வை செப். 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எவ்வித காலநீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தற்போது விளையாட்டு வீரா்களுக்கான புதிய அரசாணை வெளியிடப்பட்டு, மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப் பணிகள் இன்னும் 4 நாள்களுக்குள் நிறைவடைந்து விடும். அதன் பிறகு விளையாட்டு வீரா்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 25-ஆம் தேதிக்கு பிறகு நீட் அல்லாத அனைத்து படிப்புகளுக்கும் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments