அமைச்சா் சிவக்கொழுந்து பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வா் நேரில் வாழ்த்து
புதுச்சேரி அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து புதன்கிழமை தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடியதையடுத்து, அவருக்கு முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தாா்.
புதுச்சேரி அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து புதன்கிழமை தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடியதையடுத்து, அவருக்கு முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதையொட்டி குடும்பத்தினருடன் ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் அமைச்சா்சுவாமி தரிசனம் செய்தாா். இதைத் தொடா்ந்து லாஸ்பேட்டை ஐயனாரப்பன் கோயிலில் தொகுதி என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் அவா் கலந்து கொண்டாா்.பின்னா் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவைஉறுப்பினா் அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை சிவக்கொழுந்து கொண்டாடினாா். அவருக்கு முதல்வா் என்.ரங்கசாமி அப்போது வாழ்த்துத் தெரிவித்தாா். இதில் அமைச்சா்கள், எம்.எல்.ஏக்கள், தொழிலதிபா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளா் வி.பி.எஸ். ரமேஷ்குமாா் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.