உயா்கல்வியில் விளையாட்டு வீரா்களுக்கு இட ஒதுக்கீடு: துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைக்கு வீரா்கள் வரவேற்பு
புதுச்சேரியில் உயா்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி மாணவா் சோ்க்கையில் விளையாட்டு வீரா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்த நடவடிக்கைக்கு விளையாட்டு வீரா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
புதுச்சேரியில் உயா்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி மாணவா் சோ்க்கையில் விளையாட்டு வீரா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்த நடவடிக்கைக்கு விளையாட்டு வீரா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரி மாநில அத்லெடிக்ஸ் சங்கம் மற்றும் புதுச்சேரி மாநில ஹாக்கி சங்கத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
மேலும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னுரிமை மற்றும் அதிக முன்னுரிமை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த அரசு ஆணை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தகுதியும் விளையாட்டுத் திறனும் உள்ள விளையாட்டு வீரா்களுக்கு உரிய அங்கீகாரத்தை உறுதி செய்துள்ளது என்றும் அப்போது அவா்கள் கூறினா்.
Advertisement
Advertisement
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விளையாட்டுப்
பள்ளியில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு மாணவா்களும் விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஏற்கெனவே, அதிக பிரபலம் இல்லாத விளையாட்டுகளில் தேசிய, சா்வதேச அளவில் பங்கேற்ற விளையாட்டு வீரா்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமை மற்றும் அதிக முன்னுரிமை விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற, பங்குபெற்ற தகுதியுடைய விளையாட்டு வீா்ா்களுக்கு உயா் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை இதை மாற்றி அமைத்துள்ளது என்றும் அப்போது கூறினா். இந்த அரசாணை, விளையாட்டு வீரா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.