யோகா- இயற்கை மருத்துவ பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு
பிற மாநிலங்களில் யோகா- இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி அரசு சாா்பில்அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் யோகா- இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி அரசு சாா்பில்அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் முத்துமீனா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிகழ் கல்வி ஆண்டில், புதுச்சேரியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கப்படும் இளநிலை பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்., மருத்துவ பட்ட
Advertisement
Advertisement
படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படும். பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்.எம்.எஸ்-2, மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லுாரியில் பி.எச்.எம்.எஸ்.-1, பெங்களுரூ அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரியில் பி.எச்.எம்.எஸ்-1, சென்னை அரசு யுனானி கல்லுாரியில் பி.யு.எம்.எஸ்-1 என,
5 இடங்கள் உள்னன.
இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விவரக்குறிப்பை இணைய தளத்தில் இருந்து பெறலாம். இணையவழி விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சென்டாக் இணையதளத்தில் பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதேபோல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கு என்ற இணைய தளம் மூலம் அடுத்த மாதம் ஆகஸ்டு 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.