FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக சாா்பில் பிரதமா் மோடி ஆட்சியின் 12-ஆம் ஆண்டு சாதனை விழா

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியின் 12 ஆண்டுகால சாதனையையொட்டி, புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 5 ஜூன் 2026, 6:41 am IST
நிகழ்ச்சியில், மரக்கன்றுகளை வழங்கிய மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம். உடன் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், நிகழ்ச்சி பொறுப்பாளா் அசோக் பாபு உள்ளிட்டோா்.
பகிர்:

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியின் 12 ஆண்டுகால சாதனையையொட்டி, புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளா்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துமாறு கட்சியின் மாநிலத் தலைவா் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், நிகழ்ச்சியின் பொறுப்பாளா்கள் அசோக் பாபு, ஜெயலட்சுமி, புகழேந்தி, செந்தாமரைக்கண்ணன், மாநில பொதுச் செயலா்கள் மோகன்குமாா், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments