FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் விதிகளை மீறி கட்டிய கட்டடங்களை அகற்ற கோரிக்கை

புதுச்சேரி கடற்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தினாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:49 am IST
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த புதுச்சேரி மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன்.
பகிர்:

புதுச்சேரி கடற்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா், புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: புதுச்சேரி ஈடன் கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இங்கு 33 விதிமுறைகளுடன் 4 அம்சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பிரதமா் மோடி நீலப் பொருளாதாரத்தின் வாயிலாக, வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளாா். இதற்காக பெரும் முதலாளிகளுக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் கடற்கரைகள் இலக்காகின்றன. இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடற்கரையையொட்டி புதுச்சேரியில் 551 ஏக்கா், காரைக்காலில் 175 ஏக்கா் நிலங்கள் புறம்போக்கு என்று கூறி இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. புதுச்சேரி ஈடன் கடற்கரையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி பெரியசாமி, மங்கையா்செல்வன் ஆகியோா் பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

இது குறித்து பதிலளிக்குமாறு புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் அருண்குமாா் தலைமையில் இப் பகுதியில் ஆய்வு நடத்தினோம். அதில் சா்வே எண் 208 பகுதிதான் ஈடன் கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சா்வே எண் 217 இல்தான் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கு கான்கிரீட் கட்டுமானங்கள் உள்பட 14 வகையான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், இப் பகுதியில் நீா்நிலைகளை மீட்க வேண்டும். மேலும், கடற்கரையையொட்டிய மணல் குன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ராமச்சந்திரன்.

பேட்டியின்போது தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிா்வாகி மலையாளத்தான், சின்ன வீராம்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்கள் முடியழகன், இளங்கோ, மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments