FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் முதுநிலை மாணவா்கள் சோ்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ளச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ கல்லுாரியில் எம்எஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் 24, எம்எஸ்சி நா்சிங் 31, பொது சுகாதாரம் 34, பிபிடிஎன் 19, பிஜிஎப் 12, எம்பிஐபி 4 என மொத்தம் 124 முதுநிலை இடங்களுக்கான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்த இடங்களுக்கு நுழைவுத்தோ்வு வரும் ஜூலை 15 -ஆம் தேதி காலை 9 முதல் 10.30 மணி வரை நடக்கிறது. மாணவா்கள் ஜிப்மா் இணையதளம் மூலம் வரும் ஜூலை 6 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வு நாடு முழுவதும் 10 நகரங்களில் நடத்தப்படும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments